மக்கள் முன் விவாதம் நடத்த வாருங்கள் – சஜித் மீண்டும் அழைப்பு

மக்கள் முன் விவாதம் நடத்த வாருங்கள் என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ தனது சகோரதரர்களுடன் இணைந்தேனும் பகிரங்க விவாதத்துக்கு வரட்டும் என மீண்டும் அழைப்பு விடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஹங்வெல்ல நகரில் நேற்று (சனிக்கிழமை) மாலை இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் கூறுகையில், “நாட்டின் ஜனாதிபதியாகக் கூடியவருக்கு எதிர்காலத்தில் நாட்டில் மேற்கொள்ள வேண்டிய வேலைத் திட்டங்கள் தொடர்பாகவும் அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது தொடர்பாகவும் தெளிவு இருக்கவேண்டும்.

அவ்வாறு இல்லாமல் வேறு யாராவது எழுதிக்கொடுப்பதை வாசித்து வாக்குறுதிகளை வழங்குவதால் மக்களுக்கு ஏமாற்றமே ஏற்படும்.

அதனால் நாட்டின் ஜனாதிபதியாகக் கூடியவர் எவ்வாறு நாட்டை முன்னேற்றப் போகின்றார் என்ற வேலைத் திட்டத்தை பொது மக்களுக்கு முன்னால் தெரிவிக்க வேண்டும். அதன் மூலம் யார் ஜனாதிபதிக்கு பொருத்தமானவர் என மக்கள் தீர்மானிப்பார்கள்.

அந்த சந்தர்ப்பத்தை மக்களுக்கு வழங்குவதற்காக எனது எதிர்வேட்பாளரை பகிரங்க விவாதத்துக்கு அழைத்திருந்தேன். ஆனால் அதற்கு இதுவரை பதில் தெரிவிக்கவில்லை.

அத்துடன் ஜனாதிபதி தேர்தலில் நான் வெற்றிபெற்றவுடன் புதிய அரசாங்கம் அமைக்கப்படும். எனக்கு கீழ் அமைக்கப்படும் அந்த அரசாங்கத்தில் திருடர்களுக்கும் மோசடிகார்களுக்கும் எந்த இடமும் வழங்கப்படமாட்டாது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்