குழந்தையின் கை தெரிகிறது, ஆனால் அசைவு இல்லை; சற்றுமுன் தகவல்!

குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து 48 மணி நேரத்தை கடந்துவிட்ட நிலையில் இன்னும் மீட்க முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

48 மணி நேரத்திற்கும் மேலாக குழந்தையை மீட்க மீட்புப் படையினர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது குழந்தை 82 அடி ஆழத்திலேயே இருப்பதாக மீட்புப் பணியில் உள்ளவர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் குழந்தையின் கை தெரிகிறது, ஆனால் அசைவு இல்லையென தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் நேற்றிரவு (26) குழந்தையின் உடல் உஷ்ணம் இருந்தது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்