அர்ஜுன ரணதுங்கவிற்கு புதிய பதவி!

ஐக்கிய தேசிய முன்னணியின் கம்பஹா மாவட்ட இணைத் தலைவராக அமைச்சர் அர்ஜுன ரணதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

தேர்தல் நடவடிக்கைகளுக்காக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய, கம்பஹா மாவட்டத்தின் மஹர தொகுதிக்கான தொடர்பாடல் நடவடிக்கைகளின் தலைமைத்துவம், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் அர்ஜுன ரணதுங்கவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ரணில் விக்ரமசிங்கவின் ஆசிர்வாதம் மற்றும் ஆலோசனைகளின் மூலம் சஜித் பிரேமதாஸவின் பாரிய வெற்றிக்கு, கம்பஹா மாவட்டத்தின் மூலம் பாரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக அர்ஜுன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அர்ஜுன ரணதுங்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்