யாழில் தனியார் காணியை சுவீகரிக்க கடற்படை திட்டம்!

மாதகல்- பொன்னாலை வீதியில் தனியார் காணியை கடற்படையினர் சுவீகரிக்கும் நடவடிக்கை பொதுமக்களின் எதிர்ப்பினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்றுள்ளது.

சுழிபுரம் திருவடி நிலைப் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான சுமார் 4 ஏக்கர் காணியே இவ்வாறு கடற்படையினரால் சுவீகரிக்கப்பட இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

காணிகளை அளவீடு செய்வதற்காக நில அளவைகள் திணைக்கள அதிகாரிகள் இன்று முற்பகல் 9.30 மணியளவில் அங்கு வருகை தந்திருந்ததுடன்,  அளவீட்டுப் பணிகளை முன்னெடுக்க மக்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

இதனையடுத்து குறித்த அதிகாரிகள் மக்களிடமிருந்து எழுத்துமூல மனுவைப் பெற்றுக் கொண்டு அங்கிருந்து திரும்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது வலி.மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் நடனேந்திரன், கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்டோரும் குறித்த பகுதிக்கு வருகை தந்திருந்ததாக  எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்