முல்லைத்தீவில் 75 ஆயிரத்து 381 பேர் வாக்களிக்க தகுதி!

முல்லைத்தீவில் 75 ஆயிரத்து 381 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாகவும் 134 நிலையங்களில் வாக்களிப்பு நடைபெறவுள்ளதாகவும் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்று(திங்கட்கிழமை) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘நவம்பர் மாதம் 16ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பான ஒழுங்குகள் முல்லைத்தீவு மாவட்டத்திலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் என்ற வகையில் தேர்தல் திணைக்களத்துடன் இணைந்து பல்வேறு முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.

எமது மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 75 ஆயிரத்து 381 பேர் இருக்கிறார்கள். இவர்கள் வாக்களிப்பதற்காக 134 வாக்களிப்பு நிலையங்கள் மாவட்டம் முழுவதுமாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

அதேபோன்று வாக்கு எண்ணும் நிலையங்கள் 9 ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் வாக்கெடுப்பு நிலையங்களினுடைய ஆரம்ப நடவடிக்கைகளை தயார் செய்கின்ற ஆரம்ப நடவடிக்கைகள் பிரதேச செயலாளர் ஊடாக கிராம அலுவலர்கள் முன்னெடுத்து வருகின்றார்கள்.

அந்த வாக்கெடுப்பு நிலையங்களுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்ற அதேவேளை வாக்கெண்ணும் நிலையங்கள் இம்முறை எமது மாவட்ட செயலக வளாகத்தில் இருக்கின்ற கட்டடங்களினை பயன்படுத்தி நாங்கள் வாக்கெண்ணும் நிலையங்கள் தயாரிக்கிறோம்.

அந்த வகையில் 9 வாக்கெண்ணும் நிலையங்கள் மாவட்ட செயலகத்துக்குள்ளேயே அமைய இருக்கின்றது இதனுடைய அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு இருக்கின்றது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்