மஹிந்த ராஜபக்சாவிற்கும் மட்டக்களப்பு மாவட்ட தொழில்சார் வல்லுனர்களுக்கும் இடையிலான சந்திப்பு

எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்சாவிற்கும் மட்டக்களப்பு மாவட்ட தொழில்சார் வல்லுனர்களுக்கும் இடையிலான சந்திப்பு பாசிக்குடா பாஸ் வில்லா சுற்றுலா விடுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது.

இதனையடுத்து குறித்த அமைப்பினால் ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்போது மட்டக்களப்பு மாவட்ட தொழில்சார் வல்லுனர்கள் அமையத்தின் உறுப்பினர்களான எஸ்.ஞானரஞ்சன், ரி.டி.நிதர்சன், எஸ்.மாமாங்கராசா ஆகியோர் கலந்து கொண்டு கருத்துக்கள் தெரிவித்தனர்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்து மட்டக்களப்பு வாழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடினோம். நாங்கள் பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்சாவை தேர்தலில் ஆதரிக்கின்றோம். அதற்கான ஒத்துழைப்பினையும் வழங்க தயாராகவுள்ளோம்.

தற்போதைய அரசாங்கம் மட்டக்களப்பு தமிழ் மக்களை கவனத்தில் கொள்ளவில்லை. மற்றைய சமூகம் முன்னேற்றியது போன்று எங்களுடைய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்களுக்கு எதையும் செய்யவில்லை. இனியும் இவர்கள் செய்யப் போவதில்லை என்று கருத்து தெரிவித்தனர்.

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்