கொட்டும் மழையிலும் வவுனியாவில் கோட்டாவிற்கு ஆதரவு தெரிவித்து பிரசாரம்

னியாவில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசார கூட்டம் இன்று(திங்கட்கிழமை) கொட்டும் மழைக்கு மத்தியில் இடம்பெற்றுள்ளது.

வவுனியா வைரவ புளியங்குளம் சிறுவர் பூங்கா மைதானத்தில் மழைக்கு மத்தியில் இடம்பெற்ற இந்த கூட்டம் 10.30 மணிக்கு ஆரம்பமானது.

சுமார் 11 மணியளவில் மேடைக்கு வருகை தந்த கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவாளர்கள் கோசமெழுப்பி வரவேற்றிருந்தனர்.

இதனையடுத்து வடக்கு மக்களின் நிலைமைகள் தொடர்பாக கோட்டாபய உரையாற்றியிருந்தார்.

இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஷ, ஜி.எல். பீரிஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களான வாசுதேவ நாணயக்கார, கே. கே. மஸ்தான் உள்ளிட்ட பலரும் பங்கேற்றிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்