கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் யாழ்ப்பாணம் வந்தடைந்தார் கோட்டா!

ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளார்.

வவுனியா பிரச்சாரக் கூட்டத்தை முடித்துக் கொண்டு அவர் ஹெலிகொப்டர் மூலம் யாழ்ப்பாணத்தினை வந்தடைந்துள்ளார்.

யாழ் பிரசார கூட்டத்திற்கு முன்னதாக நல்லூர், நாகவிகாரை வழிபாடுகளுடன், யாழ்.ஆயர் மற்றும் நல்லை ஆதீனத்தை சந்தித்து ஆசி பெற்றுக்கொள்ளவுள்ளார்.

இதேவேளை, பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சார நடவடிக்கை காரணமாக யாழ்ப்பாணத்தில் அதியுச்ச பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்.நகரில் ஆயுதங்களுடன் இராணுவத்தினர், பொலிஸார் இணைந்து பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் ஜனாதிபதி, பிரதமருக்கு பாதுகாப்பு வழங்கப்படுவதுபோல் வீதிகள் மூடப்பட்டு உச்சகட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்