கோட்டாவிற்கு ஆதரவான தேர்தல் பிரசார கூட்டம் யாழில் ஆரம்பம்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சார கூட்டம் யாழில் ஆரம்பமாகியுள்ளது.

யாழ்ப்பாணம் ரக்கா வீதியில் உள்ள நரிக்குன்று மைதானத்தில் தற்போது இந்த தேர்தல் பிரசார கூட்டம் ஆரம்பமாகியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

இந்த கூட்டத்தில் கோட்டாபய ராஜபக்ஷ, அங்கஜன் இராமநாதன், டக்ளஸ் தேவானந்தா, திஸ்ஸ விதாரன, வாசுதேவ நாணயக்கார, வட மாகாண முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் குரே உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர்.

எனினும் வவுனியா தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்றிருந்த மஹிந்த ராஜபக்ஷ இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்