வடக்கின் மக்களாக தமிழ் முஸ்லிம் மக்கள் இணைந்து பலமாக எழுவோம்’

வடக்கிலிருந்து முஸ்லிம் மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட 29ஆவது வருட நினைவு நிகழ்வு எதிர்வரும் 2019.10.30 ஆம் திகதி மாலை 4.00 மணியளவில் யாழ் ஒஸ்மானியாக் கல்லூரி கேட்போர் கூடத்தில் யாழ் கிளிநொச்சி முஸ்லிம் பேரவையின் ஏற்பாட்டில் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வின் இறுதியில் மாலை 4.45 மணியளவில் ஊடகவியலாளர் சந்திப்பிற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் பேரவையினால் பிரகடனம் ஒன்றும் வெளியீடு செய்யப்படவுள்ளது.

எனவே குறித்த நிகழ்வில் தங்கள் ஊடகம் சார்ந்தும் பங்குபற்றுமர்று அன்புடன் அழைத்து நிற்கின்றோம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்