வெற்றிகரமான தொழில் முயற்சியாளர் விருது-2019 தமிழ் சி.என்.என். இயக்குநர் கலாநிதி அகிலனுக்கு!

கனடா தென்மராட்சி அபிவிருத்திக் கழகத்தின் 2019 ஆம் ஆண்டுக்கான வெற்றிகரமான சிறுதொழில் முயற்சியாளர் விருது தமிழ். சி.என்.என் மற்றும் புதிய சுதந்திரன் ஆகியவற்றின் நிர்வாக இயக்குநர் கலாநிதி முத்துக்குமாரசுவாமி அகிலகுமாரனுக்கு வழங்கப்பட்டுள்ளது..

கனடா தென்மராட்சி அபிவிருத்தி அமைப்பால் நேற்று கனடாவில் நடைபெற்ற விருதுவழங்கும்  நிகழ்வில் கலாநிதி முத்துக்குமாரசுவாமி அகிலகுமாரன் சார்பில் அவரது பாரியார் திருமதி சர்மி அகிலகுமாரன் இந்த விருதைப் பெற்றுக்கொண்டார்.

கலாநிதி முத்துக்குமாரசுவாமி அகிலகுமாரன், தென்மராட்சி மண்ணில் பிறந்து, தனது சிறுவயதில் கனடாவை அடைந்து, கனடாவிலும் ஈழத்திலும் தமது தொழில்களை விரிவுபடுத்தி, அவற்றை வெற்றிகரமாக நிர்வகித்து, பலருக்கு தொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துவருவது மட்டுமல்லாமல், எமது சமூகத்துக்கும் தன்னாலான பணிகளை ஆற்றிவருகின்றமையால் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது என்று அந்த விருதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறப்பான முறையில் பரத நாட்டிய நிகழ்வை வழங்கியமைக்காக நாடக ஆசிரியருக்கு திருமதி சர்மி அகிலகுமாரனால் நினைவுப்பரிசிலும் வழங்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்