தமிழர்களுக்கு என்ன செய்துள்ளோம்? யாழ்ப்பாணத்தில் பகிரங்கமாக அறிவித்த கோத்தபாய

தமிழர்கள் மீதான சந்தேகத்தை போக்கி அவர்களுக்கு கௌரவத்தை பெற்றுக் கொடுத்துள்ளதாக ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவின் தேர்தல் பிரச்சார கூட்டம் யாழ்ப்பாணத்தில் தற்போது இடம்பெற்று வருகிறது.

இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். இதன்போது மேலும் கூறுகையில்,

ஒரு கால கட்டத்தில் இந்த நாட்டில் தமிழ் மக்கள் சந்தேகமாக பார்க்கப்பட்டனர். நாம் அந்த சந்தேகத்தை போக்கி தமிழ் மக்களுக்கு கௌரவத்தை பெற்றுக் கொடுத்துள்ளளோம்.

மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டே எனது தேர்தல் விஞ்ஞாபனம் முன்வைக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்