ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் புதிய தலைவர்

அமெரிக்காவின் தாக்குதலில் கொல்லப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் அபுபக்கர் அல் பக்தாதிக்கு பதிலாக ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி கடந்த சனிக்கிழமை சிரியாவில் அமெரிக்க படைகள் மேற்கொண்ட தாக்குதலில் பலியானார்.

இந்நிலையில், ஈராக் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி சதாம் உசைனின் இராணுவத்தில் அதிகாரியாக கடமையாற்றிய அப்துல்லா குர்டேஷ் என்பவர், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நபர், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் முஸ்லிம் விவகாரங்களை கையாண்ட நபர் எனவும் அவர் அப்துல்லா கர்ஷேஸ் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார் எனவும் தெரியவந்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்