மனதில் ரணத்தை ஏற்படுத்திய சுர்ஜித்தின் மரணம்

இந்தியக் குழந்தையும் எங்கள் குழந்தைதான் என்ற வகையில், சுர்ஜித் உயிருடன் மீ ட்கப்பட வேண்டும் என்று உலகிலுள்ள மனிதமுள்ள மனிதர்கள் அனைவரும் பிராத்தனை செய்தனர். அவர்களில் நானும் ஒருவன். ஆனால், சுர்ஜித் உயிருடன் மீட்கமுடியவில்லை.அவரது சடலத்தினைத்தான் மீட்புக்குழுவினர் மீட்டுள்ளனர். மீட்புக்குழுவினரின் முயற்சியை நாம் குறைத்து மதிப்பிடவில்லை பாராட்டுகின்றோம். விதி விளையாடி விட்டதா? விஞ்ஞான தொழில்நுட்பம் சதி செய்து விட்டதா? என்றுதான் எண்ணத்தோன்றுகின்றது.

சுர்ஜித்தின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்று பிரார்த்திப்போடு, அவரது பெற்றோர், சகோதர்கள், உறவுகளுக்கு இறைவன் ஆறுதலையும், தேறுதலையும் வழங்க வேண்டும் என்றும் பிரார்த்திக்கின்றோம். மேலும், பொறுப்பற்ற நிலையில், காணப்படுகின்ற ஆழ்துளைக்கிணறுகள் பாதுகாப்பாக்கப்பட வேண்டும். அல்லது முழுமையாக மூடப்பட வேண்டும். அத்துடன், இந்தியாவின் விஞ்ஞான தொழில்நுட்பம் மேலும் வினைத்திறன் மிக்கதாக்கப்பட வேண்டும். இலங்கை மட்டுமல்ல ஏனைய நாடுகளும் இவ் விடயத்தினை படிப்பினையாக்கிக் கொள்ள வேண்டும். இப்படியான அனர்தங்களில் இருந்து மக்களைப் பாதுகாக்க அனர்த்த முகாமைத்துவத்தினர் எச்சரிக்கையாக இருந்தாக வேண்டும். இழப்புகள் இயற்கையின் நியதியாக இருந்தாலும், எமது செயற்கையான நடவடிக்கைகளால் இழப்புகள் ஏற்படுத்தாமல் இருப்போமாக.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்