ஐரோப்பியா செல்லும் முயற்சி: பாகிஸ்தானியர்களை நாடுகடத்திய ஈரான்

ஐரோப்பியா செல்லும் முயற்சிபாகிஸ்தானியர்களை நாடுகடத்திய ஈரான்

சட்டவிரோதமாக ஈரானுக்குள் நுழைந்த 112 பாகிஸ்தானியர்களை அந்நாட்டு எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஈரான்

ஒப்படைத்துள்ளது.

நாடுகடத்தப்பட்ட அனைவரும் பாகிஸ்தானின் புலனாய்வு அமைப்பான பெடரல் விசாரணை ஏஜென்சியிடம்(எப்.ஐ.ஏ.) அடுத்தக்கட்ட

விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முறையான ஆவணங்களின்றி ஈரானுக்குள் நுழையும் பாகிஸ்தானியர்கள் பெரும்பாலும் ஐரோப்பியாவுக்கு பொருளாதார

காரணங்களுக்காக இடம்பெயரும் முயற்சிகளை மேற்கொள்வதாகக் கூறப்படுகின்றது.

ஆவணங்களின்றி இடம்பெயரும் நிகழ்வுகளைத் தடுப்பதில் பாகிஸ்தானும் ஈரானும் இணைந்து செயல்பட்டு வரும் நிலையில்,

குடியேறிகளை நாடுகடத்தும் நடவடிக்கையில் ஈரானிய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்