மஹிந்தவின் ஆட்சியில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு கோட்டாபயவின் ஆட்சியில் நட்டஈடாம்

ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தால் கடந்த காலங்களில் காணாமல்போன உறவுகளுக்கு நட்டஈடு வழங்கப்படும்.”

– இவ்வாறு தெரிவித்தார் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ச.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவை ஆதரித்து வவுனியா நகரில் இன்று நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தமிழ் மக்கள் மீண்டும் அரசியல் ரீதியின் தவறான தீர்மானத்தை மேற்கொள்ளமாட்டார்கள் என நான் நினைக்கின்றேன்.

கோட்டாபயவின் ஆட்சியில் காணிப் பிரச்சினைக்குத் தீர்வு, காணாமல்போனோரின் உறவுகளுக்கு நட்டஈடு மற்றும் வடக்குக்கு முழுமையான அபிவிருத்தி ஆகியன துரிதகரமாகச் செயற்படுத்தப்படும்.

மக்களுக்குச் சேவையாற்றியவரையே ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கியுள்ளேன். எனவே, சிறந்த  பலமான அரசைத் தோற்றுவிக்க அனைவரும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த ஒன்றிணைய வேண்டும். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்