இலங்கை அரசு தமக்கான தீர்வை வழங்கும் வரையில் போராட்டம் தொடரும் – உறவுகள்

இலங்கை அரசு தமக்கான தீர்வினை வழங்கும் வரையில்  போராட்டம் தொடருமென வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.

983ஆவது நாளாக தொடர் போட்டத்தில் ஈடுபட்டுவரும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளால்  கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டம் இன்று (புதன்கிழமை) காலை 10.30 மணியளவில் சுமார் 1 மணிநேரம் ஏ9 வீதியில் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது ‘எங்கே எங்கே உறவுகள் எங்கே?’, ‘வேண்டும் வேண்டும் நீதி வேண்டும்’, ‘6000 ரூபாய் வேண்டாம்’ உள்ளிட்ட பல்வேறு கோசங்களை காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் எழுப்பியதுடன், தமது பிள்ளைகள் காணாமலாக்கப்பட்டமை குறித்து உண்மை நிலையை வெளிப்படுத்துமாறு கோரிக்கை விடுத்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்