மலையக மக்கள் முன்னணியின் பிரச்சினைகளை தீர்க்க ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட வேண்டும் – இராதாகிருஷ்ணன்

மலையக மக்கள் முன்னணி எதிர்நோக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வைக்காணும் வகையில் ஜனாதிபதி செயலணி ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்பதை தமது கோரிக்கையாக முன்வைத்துள்ளதாக அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “மலையத்தில் தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சனை மாத்திரம் காணப்படவில்லை.

எல்லோரும் மலையகம் என்றதும் தொழிலாளர்களின் சம்பள பிரச்சனையையே நினைக்கின்றனர். ஆனால் மலையகத்தில் அதனையும் தாண்டி ஏராளமான பிரச்சினைகள் காணப்படுகின்றன.

ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ள சஜித் பிரேமதாஸவினால் முன்வைக்கப்பட்டுள்ள இளைஞர் மறுமலர்ச்சி வேலைத்திட்டம், இளைஞர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுகொடுக்கும்.  தற்போது மலையகத்தில் இளைஞர்களின் வாக்கு விகிதம் அதிகரித்துள்ளது எனத் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்