ஐ.தே.க.விலிருந்து நீக்கப்பட்ட வசந்த சேனாநாயக்க விசேட அறிவிப்பு

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, அவரை கட்சியில் இருந்து நீக்கிய கடிதம் இன்று பிற்பகலுக்குள் அவருக்கு அனுப்பப்படும் என அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து அவரை இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்தும் நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

பல தடவைகள் கட்சிகளுக்கு இடையில் தாவிய வசந்தசேனாநாயக்க இறுதியாக ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்து கடந்த மே மாதம் முதல் இராஜாங்க அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

தற்போது ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்து செயற்பட்டு வந்தாலும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, தமது ஆட்சிக்காலத்தில் பிரதமர் யார் என்பதை தெளிவுப்படுத்த வேண்டும் என்று கோரி கடிதம் ஒன்றை அண்மையில் அனுப்பி இருந்தார். இந்தநிலையிலேயே அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்