கோட்டா கூறியதை நாங்கள் ஏற்கனவே செய்துவிட்டோம் – தயா கமகே

கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறியவற்றில் பெரும்பாலானவற்றை தற்போதைய அரசாங்கம் ஏற்கனவே நிறைவேற்றியுள்ளது என அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஆய்வு செய்து அமைச்சர் சஜித் பிரேமதாச தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை உருவாக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம், நாளை வெளியிடப்படும் என்றும் தயா கமகே கூறினார்.

அந்தவகையில் எதிர்வரும் 5 வருடங்களில் நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்வதற்கான சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்