சீரற்ற வானிலை: பாடசாலைகளுக்கு நாளையும் விடுமுறை!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தென்மாகணத்தின் சில பாடசாலைகளுக்கு நாளையும் (வியாழக்கிழமை) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது

ஹம்பாந்தோட்டை மாவட்டம்  மற்றும் மாத்தறை மாவட்டத்தின் முலட்டியான கல்வி வலயத்துக்குட்பட்ட அரச பாடசாலைகளுக்கே நாளையும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தென் மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் இன்று குறித்த பகுதிகளில் உள்ள பாடசாலைகள் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்