தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு திகோ/ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரியில் பரிசில்கள் வழங்கும் நிகழ்வு…

காந்தன்.

தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் 2019/10/30 ம் திகதி இன்று பி.ப 12.00 மணியளவில் ஆராதனை மண்டபத்தில் பாடசாலை நுலகத்தினால் நாடார்த்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கும் நிகழ்வானது பாடசாலையின் அதிபர் திருமதி.K.சோமபால தலைமையில் இடம்பெற்றது.

இன் நிகழ்வில்  அதிதிகளாக திருக்கோவில் கல்வி வலயத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளர்களான திருமதி.R. தனுசியா செல்வி.நே.வரணியா திருமதி. A.C.N. நிலோபரா அவர்களும்

விசேட அதிதிகளாக கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி பிரதி அதிபர்களான திரு K.தாயாருவன்,திருP. சதாசிவம்  திரு.C.மதியழகன், கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி முன்னாள் ஒய்வு பெற்ற அதிபர் திரு.M.கிருபைராஜா மற்றும் அக்கரைப்பற்று R.k.M. வித்தியாலய அதிபர் திரு. J.R.Dஅமிர்தலிங்கம் அவர்களும் கலந்து கொண்டனர்.

இன் நிகழ்வில் அதிதிகள் மலர்மாலை அணிவித்து வேண்டு வாத்தித்தியத்துடன்
வரவேற்க்கப்பட்டனர். மேலும் திருக்கோவில் கல்வி வலயத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி.T. தனுசியா அவர்களினால் தேசியக் கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் மாணவர்களினால் இசைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து அதிபர் திருமதி.சோமபால அவர்களினால் பாடசாலை கொடியும் ஏற்றப்பட்டு பாடசாலை கீதமும் இடம்பெற்றது.

அதனைத்தொடர்ந்து அதிகளினால் மங்கள விளக்கேற்றல்,தேவாரம் என்பன இடம்பெற்றது. மற்றும் அதிதியுரை, போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

மேலும் பாடசாலையின் ஆசிரியர்கள், கல்வி சாரா உத்தியோகத்தர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்