சந்திரிகாவின் ஆதரவும் சஜித்திற்கே – இராதாகிருஸ்ணன் நம்பிக்கை

ஐக்கிய தேசியக் கட்சி வெற்றியின் விளிம்பில் இருக்கும் இந்த நேரத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்கினால் சஜித் வெற்றி உறுதி செய்யப்படும் என்றும் அந்த முடிவும் வெகுவிரைவில் வெளிவரும் என அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும் வடக்கு, கிழக்கு தமிழர்கள் மீண்டும் வரலாற்று தவறை செய்துவிடக்கூடாது என்றும் ஏனெனில், 2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை அவர்கள் புறக்கணித்ததால் தமிழர்கள் பாரிய இழப்புகளையும் பல்வேறு துன்பத்திற்கும் உள்ளானதாக அவர் குறிப்பிட்டார்.

ஹட்டனில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த 25 வருடங்களுக்கு மேலாக இலங்கையில் கீழ்மட்ட மக்களின் வாழ்க்கை தரத்தை புரிந்துகொள்ளக்கூடிய ஒரு ஜனாதிபதி உருவாகவில்லை என்றே கூற வேண்டும்.

அந்த அடிப்படையில் நீண்ட காலத்திற்கு பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின்  ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச போட்டியிடுவது ஆதரவாளர்கள் மத்தியில் ஒரு உட்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி வெற்றியின் விளிம்பில் இருக்கும் இந்த நேரத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்கினால் சஜித் வெற்றி உறுதி செய்யப்படும். அந்த முடிவும் வெகுவிரைவில் வெளிவரும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்” என தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்