தமிழர்களின் அடிப்படை அரசியல் அபிலாஷைகளைகூட ஏற்காதவர்களை நிராகரியுங்கள் – சிவாஜி

தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாஷைகளைகூட ஏற்றுக்கொள்ள மறுப்பவர்களுக்கு வாக்களிக்க தயாாில்லை என்பதை காட்டுவதற்காகவே தனக்கு வாக்களிக்குமாறு கோருவதாக தமிழ் தேசிய மறுமலர்ச்சி சக்தியின் ஜனாதிபதி வேட்பாளா் எம்.கே.சிவாஜிலிங்கம் கூறியுள்ளாா்.

மேலும் தான் ஒரு குறியீடு மட்டுமே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் நேற்று (புதன்கிழமை) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளா் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தொிவிக்கும்போதே அவா் இவ்வாறு கூறியுள்ளாா்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “ஒரு தமிழன் இலங்கையில் ஜனாதிபதியாவது கனவிலும்கூட நடக்காத ஒன்று. ஆனாலும்  நான் எதற்காக தோ்தலில் நிற்கிறேன்? என பலா் கேட்டுள்ளனா். கேட்ககூடும். வடக்கில் உள்ள அரசியல் தரப்புக்கள், சமூக செயற்பாட்டாளா்கள், சிவில் சமூக அமைப்புக்கள் இணைந்து பொது வேட்பாளா் ஒருவரை நிறுத்துவது தொடா்பாக பேசினாா்கள்.

ஆனாலும் அந்த முயற்சி இறுதியில் தோல்வியடைந்தது. அந்த இடைவெளியை நிரப்புவதற்காகவே நான் இந்த தோ்தலில் போட்டியிடுகிறேன். இப்போது நான் ஒரு குறியீடு மட்டுமே.

இன்று தோ்தலில் போட்டியிடும் இரு பிரதான வேட்பாளா்கள் தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாஷைகளையும் அடிப்படை கோாிக்கைகளையும் நிராகாித்துள்ள நிலையில், நாங்கள் அவா்களை நிராகாிக்கிறோம் என்பதை சிங்கள தேசத்திற்கும் சா்வதேச சமூகத்திற்கும் காட்டுவதற்கான வரலாற்று வாய்ப்பாக எனக்கு அளிக்கும் வாக்கை நீங்கள் கருதுங்கள்” என மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்