ஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்து

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட 15 கட்சிகள் இணைந்து உருவாக்கும் ஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு தொடர்பான உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளது.

கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் இன்று(வியாழக்கிழமை) இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோர் கூட்டமைப்பின் தலைவர்களாக செயற்படவுள்ளனர்.

கூட்டமைப்பின் தவிசாளர், உப தலைவர், பொதுச் செயலாளர், செயலாளர்கள் ஆகிய ஏனைய பதவிகளுக்கான உறுப்பினர்கள், தேர்தலின் பின்னர் நியமிக்கப்படவுள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவர் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாஸ உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்