வவுனியாவில் 61 பேருக்கு டெங்கு தொற்று: தேசிய இயந்திர உபகரண நிறுவனத்தின் வவுனியா காரியாலயத்தின் மீதும் வழக்கு தாக்குதல்

வவுனியாவில் 61 பேருக்கு டெங்கு பரவியுள்ள நிலையில் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபனத்துடன் இணைந்த தேசிய இயந்திர உபகரண நிறுவனத்தின் வவுனியா காரியாலயத்தின் மீது வவுனியா பொது சுகாதார பரிசோதர்களினால் இன்று (30.10) நீதிமன்றத்தில் வழக்கு தாக்குதல் செய்யப்பட்டுள்ளது.

வவுனியா நகரப்பகுதியில் டெங்கு நோயின் பரம்பல் அதிகரித்து காணப்படுவதுடன், வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் 61 டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர். இந் நிலையில் வவுனியா நகர் முழுவதும் பொது சுகாதார பரிசோதகர்கள் டெங்கு நோய் பரவும் வகையில் காணப்படும் இடங்கள் சோதனை செய்யப்படுவதுடன், அவற்றை அழிக்கும் நடவடிக்கையும் இடம்பெற்று வருகிறது.

இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபனத்துடன் இணைந்த நிறுவனத்தின் தேசிய இயந்திர உபகரண நிறுவனத்தின் வவுனியா மாவட்ட காரியாலயத்தினை பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனைக்குட்படுத்திய சமயத்தில் டெங்கு நோய் பரவும் நிலையில் பல இடங்கள் காணப்பட்டன. இதன் காரணமாக  தேசிய இயந்திர உபகரண நிறுவனத்தின் வவுனியா மாவட்ட காரியாலயத்தின் மீது நீதிமன்றத்தில் வழக்கு தாக்குதல் செய்யப்பட்டது. இவ் வழக்கானது எதிர்வரும் மாதம் 11ம் திகதி வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்