மட்டக்களப்புமாவட்டத்தில்தபால் மூலம் வாக்களிக்க 11983 வாக்காளர்கள் விண்ணப்பித்து இருந்தனர்.

மட்டக்களப்புமாவட்டத்தில் இன்றும் நாளையும் தபால் மூலமானவாக்கெடுப்புநடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது.இக்கடமையில் 32 உதவிதெரிவத்தாட்சி அலுவலர்கள் கடமையில் ஈடுபட்டுவருவதாகவும் 154 வாக்கெடுப்புநிலையங்கள் அமைக்கப்பட்டு அரச திணைக்கள உத்தியோகத்தர்கள் வாக்களித்துவருகின்றனர்.
மட்டக்களப்புமாவட்டத்தில்தபால் மூலம் வாக்களிக்க 11983 வாக்காளர்கள் விண்ணப்பித்து இருந்தனர்.இதில் 461 பேருடையவாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்தன.தற்போது 11522 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர்.இன்றும் நாளையும் வாக்களிக்கதவறுகின்றஅரச திணைக்கள உத்தியோகத்தர்கள் எதிர்வரும் நவம்பர் மாதம் 7ம் திகதி 8.45 முதல் 4.15 வரைக்கும் உள்ளகாலப்பகுதியில் மட்டக்களப்பு உதவிதேர்தல் ஆணையாளர் அலுவலகத்திற்குச் சென்று நேரடியாக வாக்களிக்கமுடியுமென மாவட்ட தெரிவத்தாட்சிஅதிகாரிமாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.
மாவட்டத்தில் 154 வாக்கெடுப்பு நிலையங்களை கண்காணிப்பு பணிகளில்ஈடுபடுவதற்கு 32 உதவிதெரிவத்தாட்சிஅதிகாரிகள் செயற்பட்டுவருகின்றனர்.இவர்களின் கடமைகளுக்கு பாதுகாப்புவழங்கும் முகமாகபொலிஸ் பிரிவினரால் ரோந்துநடவடிக்கையும் ,காவல் நடவடிக்கையும் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவத்தாட்சிஅதிகாரி மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்