அவசர நிலையின் போது நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர்கள் கடைபிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் சம்பந்தமான கலந்துரையாடல்

(எம்.என்.எம்.அப்ராஸ்)

எதிர்வரும் வட கீழ் பருவ மழை பெயர்ச்சி காலப்பகுதியில் நீர்ப்பாசன உத்தியோகத்தர்கள் பின்பற்றவேண்டிய ஒழுங்குகள் மற்றும் அவசர நிலையின் போது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் சம்பந்தமாக விளக்கமளிக்கும் கலந்துரையாடலொன்று கல்முனையில் இடம்பெற்றது.

அம்பாறை மாவட்ட பிராந்திய பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் பொறியியலாளர். யூ. எல்.ஏ. நசார் தலைமையில் கல்முனை பிரதி நீர்ப்பாசன காரியாலயத்தின் கேட்போர் கூடத்தில் புதன்கிழமை (30/10/2019) இடம்பெற்றது.

இந்த நிகழ்விக்கு கிழக்கு மாகாண நீர்ப்பாசன பணிப்பாளர் எஸ்.கணேசலிங்கம் கலந்து கொண்டு இது தொடர்பாக அதிகாரிகளுக்கு விளக்கமளித்தார்.

இதன் போது பருவப் பெயர்ச்சி மழை ஆரம்பிப்பதற்கு முன் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் பருவமழை காலப்பகுதியில் நீர் நிலைகளில் ஏற்ப்படும் நீர் மாற்றங்கள் அதிகமாக உயரும் போது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் , மற்றும் அனர்த்த நிலையின் போது ஏற்படக்கூடிய சூழ்நிலைகள் அதற்காக மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் மற்றும் நீர் மற்றும் வெள்ளத்திலான அனர்த்ததில் தயார் நிலையில் இருக்க வேண்டிய வழிமுறைகள் பற்றி இதன் போது கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக மாவட்ட நீர்ப்பாசன பிரிவுகளில் பாரமரிக்கப்படும் குளங்கள் ,நீர்நிலைகளின் அளவு நிலை பற்றி விசேடமாக கவனம் செலுத்தப்பட்டது.

இதன்போது அம்பாறை மாவட்ட நீர்பாசன திணைக்களத்தின் பொறியியலாளர்கள், தொழிநுட்ப உத்தியோகத்தர்கள், பட வரைஞர்கள் மண் பரிசோதகர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டர் .

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்