மொட்டு, கை உட்பட 17 கட்சிகள் சங்கமம் – புதிய அரசியல் கூட்டணி உதயம்

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உட்பட 17 கட்சிகள் இணைந்து ‘ஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு’ எனும் பெயரில் புதிய அரசியல் கூட்டணியை உருவாக்கியுள்ளன.

இதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று முற்பகல் 10.20 இற்கு இலங்கை மன்றக் கல்லூரியில் வைத்து கைச்சாத்திடப்பட்டது.

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச, கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் உட்பட மேலும் சில பிரமுகர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

புதிய அரசியல் கூட்டணியில் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கே முன்னுரிமை வழங்கப்படவுள்ளது. நிறைவேற்றுக்குழு, தெரிவுக்குழு ஆகியவற்றில் அக்கட்சி உறுப்பினர்களே 51 சதவீதம் பங்கேற்கவுள்ளனர் எனத் தெரியவருகின்றது.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஈ.பி.டி.பி., தேசிய காங்கிரஸ், முஸ்லிம் உலமாக் கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி, புதிய ஹெல உறுமய உட்பட மேலும் சில கட்சிகளே அங்கம் வகிக்கின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்