சஜித்திற்கு உயிராபத்தை ஏற்படுத்த காரணமாவனவரின் புகைப்படம் வெளியானது! யார் தெரியுமா?

சஜித் குருநாகல் கூட்டத்துக்கு ஹெலிகொப்டரில் இறங்கப் போகும் தருணத்தில் அப்பகுதி மின் விளக்குகளை அணைத்து விபத்துக்குள்ளாக்கப் பார்த்துள்ளார்கள்.

குருநாகல் வெலகெதர விளையாட்டரங்கு அருகே கடந்த புதன்கிழமை (30) நடைபெற இருந்த கூட்டத்துக்கு சஜித் தனியார் ஹெலிகொப்டரில் இன்னொரு தேர்தல் பிரசார கூட்டத்தை முடித்து விட்டு வரும் வழியில் அப்பகுதி இருட்டி இருந்தது.

குருநாகலில் ஹெலிகொப்டரை இறக்குவதற்கு சரியான ஒரு இடம் இல்லாமையால் வெலகெதர விளையாட்டு மைதானத்தின் அருகே ஹெலியை இறக்க தீர்மானிக்கப்பட்டது.

இருள் சூழ்ந்த நிலையில் ஹெலிக்கொப்டரை செலுத்திய விமானிகளுக்கு அவர்கள் இறங்கப் போகும் பகுதியின் விளக்குகளின் உதவியுடன் சென்று ஹெலியை இறக்குமாறு பணிக்கப்பட்டுள்ளது.

அப்படி ஹெலியை இறக்க முற்படுகையில் இதை அறிந்த குருநாகல் நகர சபையின் பலம் கொண்ட ஜோன்ஸ்டன் பர்ணாந்துவின் செயலாளராக இருக்கும் ஒருவர் கட்டளை இட்டு குருநாகல் நகரின் அனைத்து மின்சாரத்தையும் நிறுத்தியுள்ளார்.

இதனால் குருநாகல் நகரின் மேல் பறந்து இறங்க முயன்று கொண்டிருந்த ஹெலி வெகு நேரமாக வானில் பறந்தவாறு தடுமாறியுள்ளது.

அதன்பின் பாதுகாப்பு தரப்பினரது ஆலோசனையின் பிரகாரம் ஹெலி அங்கு இறங்க முயற்சி செய்யாமல் திரும்பி சென்றுள்ளது.

ஹெலி இறங்கப் போகும் இறுதி தருணத்தில் இப்படி ஒரு நிலை ஏற்பட்டிருந்தால் சஜித்தின் உயிருக்கு ஆபத்து கூட ஏற்பட்டிருக்கலாம் என குருநாகல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதை அறிந்த குருநாகல் கூட்டத்தின் அமைப்பாளரான அசோக்க அபேசிங்க அவரது ஆதரவாளர்கள் முன் செய்வதறியாது மண்டியிட்டு அழுதுள்ளார்.

அரச பலமொன்று இல்லாமல் நகர சபை ஒன்றின் பலத்தோடு மட்டும் உள்ள ஒரு தரப்பு இப்படியான குரூரமாக செயல்பட்டு எதிர் வேட்பாளர் ஒருவரை அழிக்கும் அளவுக்கு நினைக்கும் போது , இவர்களுக்கு 2015க்கு முன் இருந்தது போன்ற அரசியல் பலம் ஒன்று கிடைத்தால் எப்படி இருப்பார்கள் என நினைக்கத் தோன்றுகிறது?

கடந்த 2015 ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மைத்ரியின் கூட்டத்துக்கு துப்பாக்கி சூடு நடத்தினார்கள். பெலமடுல்ல கூட்டத்தில் மைத்ரி பேசிக் கொண்டிருந்த போது கல் வீச்சு ஒன்றும் நடந்து மைத்ரிக்கு சிறு காயம் கூட ஏற்பட்டது குறிப்பிடத் தக்கது.

அதிகாரம் இல்லாத போது இப்படி என்றால், கைக்கு அதிகாரம் கிடைத்தால் நிலை என்ன?

சஜித்துக்கு உயிராபத்தை ஏற்படுத்தும் விதத்தில் உலங்குவானுர்தி இறங்கும் தருணத்தில் குருநாகல் நகர் பகுதியின் மின்சாரத்தை துண்டித்த குருநாகல் மொட்டு கட்சி மேயர் இவர்தான் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத் தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்