நாட்டை கட்டியெழுப்பக்கூடிய நிர்வாகத்தை எம்மால்தான் வழங்க முடியும்- அநுர

நாட்டை கட்டியெழுப்பக்கூடிய ஒரு சிறந்த நிர்வாகத்தை எம்மால்தான் உருவாக்க முடியுமென தேசிய தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

சிலாபத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அநுர குமார திஸாநாயக்க மேலும் கூறியுள்ளதாவது, “தேர்தல் மேடைகளை பார்க்கும்போது எமக்கு நத்தார் காலத்தை போன்று தெரிகிறது.

மேலும், இரண்டு வேட்பாளர்கள் இருக்கின்றனர். அவர்கள் பல மேடைகளில் ஏறுகின்றனர். இவ்வாறு செல்லும்  அவர்கள், காண்பதை எல்லாம் இலவசமாக தருவதாக கூறுகின்றனர்.

அவ்வாறாயின் இவ்வளவு காலம் யார் இந்த நாட்டை ஆட்சி செய்தனர்? கடந்த 70 வருடங்களாக தேர்தல் வந்தவுடன் இவர்கள் வந்து வறுமையை விற்பனை செய்கின்றனர்.

எனவேதான் வறுமையை விற்பனை செய்யும் அரசிலுக்கு பதிலாக வறுமையை ஒழிக்கும் அரசியல் ஒன்றை இந்நாட்டில் ஏற்படுத்தவே நாம் தற்போது வந்துள்ளோம்.

ஆகவே அதற்கான அதிகாரத்தை மக்கள் எமக்கு வழங்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்