கிளிநொச்சி ஜெயந்திநகர் பகுதியில் கொங்கிரீட்டிலான பகுதியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

கிளிநொச்சி ஜெயந்திநகர் பகுதியில் கொங்கிரீட்டிலான பகுதியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் அமைந்தள்ளதனியார் காணி ஒன்றில் வீடு ஒன்றை அமைப்பதற்காக குழி ஒன்றை அமைத்தபோதே குறிதத் பகுதி அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறித்த பகுதியிலிருந்து கண்ணிவெடி மற்றம் சில ரவைகள் காணப்பட்டமை தொடர்பில் காணி உரிமையாளர்களால் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து குறித்த பகுதியில் விசாரணை மெற்கொண்ட கிளிநொச்சி பொலிசார் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றின் அனுமதியுடன் அகழ்வு பணியினை ஆரம்பிக்க உள்ளமை குறிப்பிடதக்கதாகும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்