காட்போட்டிலான மூவாயிரம் வாக்குப் பெட்டிகள் கொள்வனவு

ஜனாதிபதித் தேர்தலில் பயன்படுத்துவதற்காக, காட்போட்டிலான மூவாயிரம் வாக்குப் பெட்டிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த காட்போட் பெட்டிகள், நீரில் கசிந்துவிடாத வகையில் மிகவும் பாதுகாப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு காட்போட் பெட்டிக்கு, ஆயிரத்து 500 ரூபாய் வரையில் செலவிடப்பட்டுள்ளதாகவும் பிளாஸ்டிக்கிலான பெட்டியொன்றுக்கு 8 ஆயிரத்து 500 ரூபாய் வரையில் செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த காட்போடிலான வாக்குப் பெட்டிகள், யாழ்ப்பாணம், வன்னி, அம்பாறை, குருநாகல், மட்டக்களப்பு, பொலன்னறுவை, புத்தளம், அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் பயன்படுத்தப்படவுள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்