சஜித்தை ஆதரித்த கட்சியின் அமைப்பாளர்கள் நீக்கம் – தயாசிறி அதிரடி

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்த சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள், கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

மேலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்கனவே பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளித்துள்ள நிலையில், அவர்கள் மற்றுமொரு கட்சிக்கு ஆதரவளிக்க முடியாது என்றும் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான ‘அப்பி ஸ்ரீ’ இயக்கத்தில் இணைந்த கட்சி அமைப்பாளர்களே கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என தயாசிறி ஜயசேகர கூறினார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க இன்று ஐக்கிய தேசிய முன்னணியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டத்துடன், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்