வரலாற்றில் முதன்முறையாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய நடைமுறை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருள் பரிசோதனைக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு செயலகத்தால் ரோபோ இயந்திரங்கள் நேற்று முதல் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

வெடிப்பொருட்கள் மற்றும் போதைப்பொருட்களை கண்டுபிடிப்பதற்காக இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதன்முறையாக இவ்வாறான செயற்திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விமான நிலையத்திற்குள் வருவோர் மற்றும் வெளியேறுவோரை சோதனையிடுவதற்காக நுழைவாயில் பகுதியில் இந்த புதிய ரோபோக்கள் களமிறக்கப்பட்டுள்ளன.

இவற்றின் மூலம் விமான பயணிகள் மற்றும் அவர்களின் பொதிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதுடன், இதன்மூலம் வெடிப்பொருட்கள் மற்றும் அனைத்து ரக போதைப்பொருட்களையும் அறிந்து கொள்வதற்கான ஆற்றலை இந்த 2 ரோபோக்களும் கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

மேலும் குறித்த ரோபோக்கள் இரண்டும் அங்கும் இங்கும் நகர்ந்து பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடியவை.

Robot Inspection Dog என்ற இந்த இரண்டு ரோபோக்களும் சீன குடியரசினால் இலங்கை பொலிஸாருக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்