பாதாளக்குழுவினருக்கு எனது ஆட்சியில் அனுமதி கிடையாது – சஜித்

பயங்கரவாதத்துக்கோ பாதாளக்குழுவினருக்கோ தனது ஆட்சியில் அனுமதி கிடையாது என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பிலியந்தலையில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையில் எதோவொரு மூலையில் பயங்கரவாதம் எஞ்சியிருக்குமானால், நாம் நிச்சயமாக அதனை அழித்தொழிப்போம்.

அதேபோல பாதாளக்குழுவினர், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் ஆகியோருக்கும் எமது காலத்தில் முடிவுக்கட்டப்படும் என்பதை இவ்வேளையில் கூறிக்கொள்கிறேன்.

அத்தோடு, சிறுவர்- பெண்களை துஸ்பிரயோகம் செய்வோருக்கும் எமது ஆட்சியில் இடமில்லை.

நாம் ஒழுக்கம் மிகுந்த நாடொன்றை கட்டியெழுப்ப வேண்டும். இதுதான் எமது பிரதான இலக்காக இருக்கிறது. இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் மேற்கொள்வோம்” என மேலும் குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்