40 ஆண்டு காலமாக எதையும் செய்யவில்லை – இ.தொ.காவினருக்கு சவால் விடுத்துள்ள திலகர் எம்.பி.

கடந்த 40 ஆண்டு காலமாக மலையகத்தில் பல அமைச்சுக்களை வைத்திருந்தவர்கள், கால்நடை அபிவிருத்தி அமைச்சை வைத்துக்கொண்டு மக்களுக்கு  எதுவும் செய்யவில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.

கால்நடை அமைச்சை வைத்திருந்தவர்கள் மக்கள் நலன்பெற எந்தவொரு மாட்டுப் பண்ணையையும் அமைக்கவில்லை என்றும் அதில் மலையக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்களையும் வழங்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

மேலும் மலைநாட்டுப் புதிய கிராமங்கள்  உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சு எனும் அமைச்சை உருவாக்கி அதன் மூலம் 4 ஆண்டுகளில் நாம் பல புதிய கிராமங்களை அமைத்துக் காட்டியுள்ளோம் எனவும் எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தில் வீடுகளை அமைப்பதாக அறிக்கை மட்டும் விடும் அவர்கள் கிராமங்களை அமைந்திருந்தால் நாங்கள் ராகலையில் அமைத்துவரும் ‘ராமலிங்கநகர்’ போன்ற ஒன்றை காட்டட்டும் பார்க்கலாமெனவும் அவர் சவால் விடுத்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்