முல்லைத்தீவில் பலத்த பாதுகாப்பு

முல்லைத்தீவு – முள்ளியவளை பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச பங்குபற்றும் மாபெரும் தேர்தல் பரப்புரைக் கூட்டமொன்று இன்று (திங்கட்கிழமை)  முல்லைத்தீவு முள்ளியவளை விநாயகர் விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இதனையடுத்தே குறித்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய விநாயகர் விளையாட்டுக்கழக மைதானம் மற்றும் முள்ளியவளை தொடக்கம் முல்லைத்தீவு வரையான  வீதிகளில் பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கூட்டத்திற்காக வருகை தரும் மக்கள் சோதனைகளின் பின்னர்  மைதான வளாகத்துக்குள்  செல்வதற்கு அனுமதிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்