சமையல் எரிவாயுவை அதிக விலைக்கு விற்பனை செய்தவர்களுக்கு எதிராக வழக்கு

சமையல் எரிவாயுவை மறைத்து வைத்து அதிக விலையில் விற்பனை செய்துவந்த 37 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்படவுள்ளது.

நாட்டில் தற்போது சமயல் எரிவாயுவிற்கான தட்டுப்பாட்டு நிலவுகிறது.

இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சில வர்த்தகர்கள், எரிவாயு கொள்கலன்களை மறைத்து வைத்து சந்தையில் விற்பனை செய்து வருவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக நுகர்வோர் சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

அவ்வாறான வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நுகர்வோர் சேவைகள் அதிகார சபை எச்சரித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்