நாட்டில் ஊழல் மற்றும் வீண்விரயத்தை இல்லாமல் செய்வோம்- சுனில் ஹந்துன்நெத்தி

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி வேட்பாளருமான அனுர குமார திசாநாயக்க ஆதரித்து மற்றும் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பாக விளக்கமளிக்கும் கலந்துரையாடலொன்று கல்முனை பரடைஸ் மண்டபத்தில் நேற்று  (03/11/2019) இடம் பெற்றது.

இதன் போது பாராளுமன்ற உறுப்பினரும் கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்க்கண்டவாறு தெரிவித்தார்.

இதன் போது அங்கு மேலும் உரையாற்றுகையில் –

நாங்கள் வாக்குறுதி அளிக்கிறோம் இந்த நாட்டில் ஊழல் மற்றும் வீண்விரயத்தை இல்லாமல் செய்வோம். இந்த வாக்குறுதியை வழங்குவது ஊழல் அற்ற தலைவரால் மாத்திரமே முடியும் .
நாட்டின் பாதுகாப்பையும் மக்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்துவோம்.

நாங்கள் மக்களிடம் கேட்க்கிறோம் தேர்தல் இல்லாத காலங்களில் உங்கள் மனதில் உள்ள உங்களுக்கு விருப்பமான கட்சி எது?விவசாயிகளின் ,மீனவர்களின் பிரச்சினைகள் பற்றி பேசுகின்ற கட்சி என்றால் மக்கள் விடுதலை முன்னணியே
இந்த நாட்டின் சமாதானத்தை ஏற்படுத்த வேண்டுமானால் அனுர குமார திஸ்ஸா நாயக்கவை ஆதரியுங்கள் என்றார்.

மேலும் அம்பாறை மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு கட்சிகளின் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளமை குறிப்பிட்டத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்