அகில இலங்கை சமாதான நீதவானாக சண்முகநாதன் யோகானந்தன் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். …

அக்கரைப்பற்று 8/2 பொது வீதியைச் சேர்ந்த சண்முகநாதன் யோகானந்தன் அகில இலங்கை சமாதான நீதவானாக நீதி அமைச்சினால் இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் அக்கரைப்பற்று மேலதிக நீதவான் திரு.பி.சிவகுமார் முன்னிலையில் தீவு முழுவதுக்குமான சமாதான நீதவானாக 2019/11/06 இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

இவர் அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி (தே.பா)யில் தொழிநுட்ப பீட ஆய்வு கூட உதவியாளராக பணியாற்றிவரும் இவர் அப்பாடசாலையிலே ஆரம்பக் கல்விமுதல் உயர்தரக் கல்விவரை கல்வி கற்றுள்ளார். மேலும் கிழக்கு பல்கலைக்கழக நூலக விஞ்ஞான கற்க்கை நெறியினை பூர்த்தி செய்துகொண்ட இவர் ஒரு சிறந்த விளையாட்டு வீரராகவும்,சமூக சேவையாளராகவும், அக்கரைப்பற்று விளையாட்டு கழகங்களில் பிரபல்யம் வாய்ந்த ஜொலிபோய்ஸ் அணியின் உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்