தமிழ் சி.என்.என். நிர்வாகி கலாநிதி அகிலன் சமாதான நீதிவானாகச் சத்தியப் பிரமானம்!

புதிய சுதந்திரன், தமிழ் சி.என்.என். ஆகியவற்றின் நிர்வாக இயக்குநர் கலாநிதி முத்துக்குமாரசுவாமி அகிலகுமாரன் அகில இலங்கை சமாதான நீதிவானாக இன்று சாவகச்சேரி மாவட்ட நீதிமன்றில் மாவட்டநீதிபதி ஜே.கஜநிதிபாலன் முன்னிலையில் சத்தியப்பிரமானம் செய்துகொண்டார்.

இவர்  Dry Zone Development foundation (Sri Lanka) இன் தலைவரும்,  Hunger Free world Foundation (Canada) இன் ஸ்தாபகரும்,  தொழிலதிபரும் ஆவார்.

கனடா தென்மராட்சி அபிவிருத்திக் கழகத்தின் வருடாந்த விருதுவழங்கல் நிகழ்வு கடந்த வாரம் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் சிறந்த தொழில் முயற்சியாளரும் சமூக சேவையாளருக்குமான விருது கலாநிதி முத்துக்குமாரசுவாமி அகிலகுமாரனுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்