ஜனாதிபதி தேர்தல் – போலி பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக போலி பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு, சமூக வலைத்தள நிறுவனங்களிடம் இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, தபால் மூல வாக்களிப்பில் தமக்கே அதிக வாக்குகள் பதிவாகியிருப்பதாக சில அரசியல் கட்சிகள் சமூக வலைத்தளங்கள் ஊடாக பிரசாரங்களை முன்னெடுத்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இந்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

இவ்வாறான நடவடிக்கைகள் ஏனைய வாக்களார்கள் மத்தியில் தேவையற்ற தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 16ஆம் திகதி தபால் மூல வாக்கு முடிவுகள் வெளிவரும் வரை எந்தவொரு வேட்பாளருக்கும் அவ்வாறு கூற முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்