சஹ்ரான் குழுவினரின் தாக்குதலால் முஸ்லிம் சமூகம் அச்சுறுத்தப்பட்டுள்ளது – ரிஷாட்

சஹ்ரான் தலைமையிலான ஒரு குழு செய்த தாக்குதல் சம்பவத்தினால் முஸ்லிம் சமூகம் அச்சுறுத்தப்பட்டதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட இளைஞர் மாநாடு நேற்று சம்மாந்துறையில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி சஹ்ரானின் கூலிப்படை செய்த நாசகார வேலையின் காரணமாக முஸ்லிம் சமூகத்தினர் சமூக, சமய, அரசியல் ரீதியில் பல வழிகளிலும் இம்சைக்குட்படுத்தப்பட்டனர்.

சஹ்ரானின் அந்த நாசகார தாக்குதலை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். நாம் அன்று கட்சி பேதங்களை மறந்து சமூகத்தின் இருப்புக்கும் பாதுகாப்புக்கும் இளைஞர்களாகிய உங்களுக்கும் வழிகாட்டு முகமாக ஒன்றுபட்டு பதவிகளை துறந்து ஏற்படவிருந்த பாரிய தாக்குதலை தவிர்த்திருந்தோம்” என மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்