ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் குண்டு வெடிப்பொன்று இடம்பெறும் சாத்தியம் – எரான் விக்ரமரத்ன

ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் குண்டு வெடிப்பொன்று இடம்பெறும் சாத்தியமுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் குண்டு வெடிப்பொன்று இடம்பெறும் சாத்தியமுள்ளதாக என்ற கருத்திலான டுவிட்டர் தகவலொன்று தனக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக பொலிஸ் தலைமையகம் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அமைச்சர்களான ஹரின் பெர்ணாண்டோ மற்றும் அஜித் பி பெரேரா ஆகியோருக்கும் இந்த டுவிட்டர் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அதனை பதிவிட்ட நபர் பாதுகாப்பு பேரவையை கூட்டுமாறு கோரியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்