தன்னலம் சார்ந்தே கூட்டமைப்பு சஜித்திற்கு ஆதரவு வழங்கியுள்ளது – உறவுகள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள அத்தனை கட்சிகளும் தன்னலம் சார்ந்தே ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்கியுள்ளன என காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கிளிநொச்சி வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்க அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றது.

இதன்போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பு புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளித்துள்ளமை குறித்து கேள்வியெழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளிக்கும்போதே வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்க செயலாளர் லீலாதேவி ஆனந்தநடராஜா இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அத்தனை கட்சிகளும் அன்றுமுதல் எமக்கெதிரான விடயங்கள் அத்தனைக்கும் மௌனம் காத்தனர்.

2 வருட கால அவகாசம் வழங்கியபோதும் காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான சட்டமூலத்திற்கு ஆதரவு வழங்கியும் அவர்கள் பல துரோக செயல்களை முன்னெடுத்தனர்.

தற்போதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சுகபோகத்திற்காகவே ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு தமது ஆதரவினை வழங்கியுள்ளனர்” என மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்