பரப்புரைகளில் பங்கேற்க பசில் மட்டக்களப்புக்கு பயணம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‪ஷவை ஆதரித்து மட்டக்களப்பு மாவட்டத்தின் பல இடங்களில் கூட்டங்கள் இடம்பெறவுள்ளன.

இந்த கூட்டங்கள் எதிர்வரும் 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளதாக பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் என்.எம். முஹம்மத் சுஐப் தெரிவித்தார்.

இக்கூட்டங்களில் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் அதன் ஸ்தாபகருமான பஷில் ராஜபக்‪ஷ கலந்துகொண்டு கோட்டாபயவுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடவுள்ளார்.

அத்தோடு ஏறாவூரில் அன்றைய தினம் மாலை 6 மணிக்கு பொதுக் கூட்டம் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்