வன்னித் தேர்தல் தொகுதியில் தபால் மூலம் 95 சதவீத வாக்குப் பதிவு: தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்

வன்னித் தேர்தல் தொகுதியில் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பித்தவர்களில் 95.25 வீதமானோர் வாக்களித்துள்ளதாக தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரும், வவுனியா மாவட்ட அரச அதிபருமான ஐ.எம்.ஹனீபா தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னித் தேர்தல் தொகுதியில் 12 ஆயிரத்து 184 தபால் மூல வாக்குக்கான விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அதில் ஏற்றுக் கொள்ளப்பட்ட தபால் மூல வாக்கு விண்ணப்பங்கள் 10 ஆயிரத்து 994 ஆகும். மேலும் 1190 நிராகரிக்கப்பட்டுள்ளது. தபால் மூலம் 10 ஆயிரத்து 472 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த அடிப்படையில் 95.25 வீதமானோர் தபால் மூலம் வாக்களித்துள்ளனர்.

இது தவிர, எமது வவுனியா மாவட்டத்தில் 36 தேர்தல் முறைப்பாடுகள் கிடைத்தன. அவை ஒவ்வொன்றுக்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்க்ப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்