வவுனியாவில் தொழு நோய் தொடர்பான விழிப்புணர்வு!

வவுனியாவில் தொழு நோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு கிராமிய அபிவிருத்தி சங்கத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (07) நடைபெற்றது.

ஐக்கிய அபிவிருத்தி நிதியத்தின் திட்ட இணைப்பாளர் எஸ். சிவாகர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வளவாளராக வவுனியா மாவட்ட தொழுநோய் பரிசோதகர் எஸ்.சிவபாலன் கலந்துகொண்டு தொழுநோய் தொடர்பாக விளக்கமளித்திருந்தார்.

தொழு நோய் தொற்றுக்குள்ளாகியிருப்போரை கண்டறியும் முறை, அவர்களுக்கான ஆற்றுப்படுத்தல்கள், தொழு நோயின் அறிகுறிகள், தொழு நோயை கட்டுப்படுத்தும் முறைகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.

வவுனியா மாவட்டத்தில் தொழு நோய் தொற்றுக்குள்ளாகியுள்ளவர்களை அடையாளம் காணும் முகமாக இவ் விழிப்புணர்வு நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்வில் மத குருமார், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், தேசிய சமாதானப் பேரவை உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்