மட்டக்களப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான தெளிவூட்டல் கருத்தரங்கு

(ஞானச்செல்வன்)

ஐனாதிபதி தேர்தலில் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான தெளிவூட்டல் கருத்தரங்கு இன்று (7.11.2019) காலை 10.00மணிக்கு மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் தெரிவத்தாட்சி அலுவலகர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் உதவி தெரிவித்தாட்சி அலுவலர் ஆர்.சசீலனும் இந் தெரிவூட்டல் கருத்தரங்கில் கலந்து கொண்டு கருத்துக்களை வழங்கினர்.

எதிர்வரும் ஐனாதிபதி தேர்தலுக்கான வழங்களை பெறுதல் மற்றும் வாக்களிப்பு நிலையங்களுக்கான உதவி தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான அறிவூட்டல் கருத்தரங்கில் எல்லா வகையான சந்தேகங்களுக்கும் தெரிவத்தாட்சி அலுவலகர் விளக்கம் அளித்தார் இம்முறை வழமைக்கு மாறாக நேரம் ஒருமணித்தியாலத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளமை மற்றும் இம்முறை பயன்படுத்தபடவுள்ள காட்வோட் வாக்குப்பெட்டிகள் கையாள்வது தொடர்பான முறைகள் கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டும் என தெரிவத்தாட்சி அலுவலகர் தெரிவித்தார்.

அமைக்கப்பட்டுள்ள வாக்கெடுப்பு நிலையங்கள் 428 அவற்றில் 8 வாக்கெடுப்பு நிலையங்களுக்கென ஒவ்வொரு உதவி தெரிவத்தாட்சி அலுவலர் என்ற வகையில் 54 உதவி தெரிவத்தாட்சி அலுவலகர்கள் பணியாற்றுவர் அதற்கு புறம்பாகவும் கணக்கெடுப்பு நிலையங்களுக்கான உதவி தெரிவத்தாட்சி அலுவலகர்களும் ஏனைய கடமைக்காக மொத்தம் 4991 பேர் இம் முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் கடமையில் ஈடுபடவுள்ளதாக குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்